பிரபல மலையாள நடிகர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் கோவிந்தன் குட்டி மீது மேலும் ஒரு இளம்பெண் பலாத்கார புகார் கொடுத்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலையாளத்தில் அனந்தபத்ரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் கோவிந்தன் குட்டி. அசுர வித்து, ஹார்ட் பீட்ஸ், ஒன் வே டிக்கெட், ஸ்பிரிட் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இது தவிர ஏராளமான டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கோவிந்தன் குட்டி மீது கடந்த மாதம் போலீசில் பலாத்காரர புகார் கொடுத்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்ததாக இளம்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் வடக்கு போலீசார் நடிகர் கோவிந்தன் குட்டி மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே புகாரை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி கோவிந்தன் குட்டியும், மலையாள சினிமா உலகை சேர்ந்த சிலரும் தன்னை மிரட்டுவதாக அவர் கூறினார்.

இதற்கிடையே நடிகர் கோவிந்தன் குட்டி முன் ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து அந்த இளம்பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். இந்தநிலையில் நடிகர் கோவிந்தன் குட்டி மீது நேற்று மேலும் ஒரு இளம்பெண் பலாத்கார புகார் கொடுத்து உள்ளார். இது தொடர்பாக கோவிந்தன் குட்டி மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.