ராஜஸ்தான் மாநிலம், சிரோகி மாவட்டத்தில் சியாகாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தனது மூத்த மகள் கிஷ்ணா என்பவரை பக்கத்து ஊரை சேர்ந்த நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளார்.
நாராயணன் ஜோகி தன்னுடைய புது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே திடீரென கள்ளக்காதல் பற்றிக் கொண்டுள்ளது.
நாளடைவில் இந்த விவகாரம் அவர்களுக்குள் அதிக நெருக்கத்தையும், ஈர்ப்பையும் ஏற்பட்டுத்தி உள்ளது. இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் இருவருமே பிரிந்து வாழ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடைசியில் புத்தாண்டு அன்று மாமியாரும், மருமகனும் சேர்ந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டே, யாருக்கும் தெரியாமல் ஓடிவிட்டனர்.
புத்தாண்டு விடியற்காலை நேரத்தில் மாமியாரும், மருமகனும் வீட்டை விட்டு, வெளியேறியதாக கூறப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட வேண்டிய நேரத்தில் தனது மனைவி மற்றும் மருமகனை காணவில்லை என்பதை அறிந்த ரமேஷ் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்துக்கு விரைந்து சென்ற ரமேஷ் தனது மனைவி மற்றும் மருமகன் ஓடிப்போன விவரத்தை கூறி புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து ரமேஷ் கூறியதாவது:
திருமணம் முடிந்த பிறகு மகளும், மருமகனும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்படித் தான் மருமகன் டிசம்பர் 30ம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்து இருந்தார்.
அப்போது நானும், மருமகனும் அன்றைய தினம் கொஞ்சம் கூடுதலாகவே தண்ணி அடித்தோம். போதையில் நான் விழுந்துவிட்டேன். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்தபோது தான் பக்கத்தில் இருந்த என் மனைவியையும், மருமகனையும் காணவில்லை.
என்னுடைய மனைவியை மருமகன் மயக்கிவிட்டார். அவர் தான் என் மனைவியை இழுத்து சென்றுள்ளார். என் மனைவியை காவல் துறையினர் தான், மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.
இவ்வாறு ரமேஷ் புகாரில் கூறி உள்ளதை தொடர்ந்து மாயமாகி இருக்கும் மாமியார், மருமகனை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.