புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்துள்ள தச்சன்குறிச்சியில் நாளை ஜனவரி 6 ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி அறிவித்திருந்தார்.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி தெரிவிக்கையில், “தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடைபெறும்.
வருகின்ற ஆறாம் தேதி கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் நடத்தி வந்தனர்.
நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதால், காளைகளும், காளை பிடி வீரர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நாளை நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்ததால் அதிருப்தி அடைந்த விழா கமிட்டியினர், அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.