இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு இன்றுடன் 56 வருடங்கள் 

இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு இன்றுடன் 56 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.

இதனை முன்னிட்டு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகமும், பிராந்திய சேவைகளும் சர்வமத பிரார்த்தனைகளை ஒழுங்கு செய்திருந்தன.

மலையக சேவை முறையே கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திலும், கண்டி தக்கியா பெரிய பள்ளிவாசலிலும், கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்திலும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தியது.

ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய குருக்கள் சமயச் செல்வர் லகுதர சர்மா தலைமையில் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. மிகவும் சிறப்பான வரலாற்றைக் கொண்ட இலங்கை வானொலி மென்மேலும் பரந்த அளவில் சேவையாற்ற இறையாசியை வேண்டி நிற்பதாக அவர் தெரிவித்தார்.

கண்டி தக்கியா பெரிய பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனைகளுக்குத் தலைமை தாங்கிய பஸ்லுல்லா ரஹம்மான் மௌலவி, சகல மதக்குழுவினருக்கும் சமவாய்ப்பு அளித்து, இலங்கை வானொலி ஆற்றும் சேவைகள் தொடர வேண்டும் என்றார்.

கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தின் தலைமை மதகுரு வணக்கத்திற்குரிய பிதா ஏப்ரஹாம் நேரியோ அடிகளார் தமது பிரார்த்தனையில், தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் தேசிய வானொலியின் சேவை முன்னெப்போதையும் விடவும் கூடுதலாக அவசியப்படுகிறது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.