90 சதவீத தோல்வி படங்கள் ; அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்

கடந்த 2022ம் ஆண்டில் மலையாள திரையுலகில் வெளியான 90% படங்கள் தோல்வியை தழுவியதால் மலையாளத் திரையுலகம் அதிர்ச்சியில் இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த வருடம் 176 படங்கள் மலையாளத்தில் வெளியாகின. இதில் 17 படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றியையும் ஓரளவு டீசன்ட்டான வெற்றியையும் பெற்றுள்ளன. மீதம் உள்ள 159 படங்கள் மூலமாக கிட்டத்தட்ட 325 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மலையாள திரையுலகின் வர்த்தக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் கன்னட திரையுலகில் இருந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் கேரளாவில் 30 கோடி வசூலித்துள்ளது. எட்டு படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை கொடுத்துள்ளன. எந்தவித பிரபல நடிகர்களும் இல்லாமல் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபத்தை வாரி கொடுத்துள்ளது.

2022ல் துவக்கத்தில் வெளியான சூப்பர் சரண்யா படமும் 2022 இறுதியில் வெளியான உன்னி முகுந்தன் நடித்த மாளிகைப்புரம் படமும் மலையாள திரையுலகை வெற்றியில் துவக்கி வெற்றியில் முடித்து வைத்து இருக்கின்றன. என்றாலும் இந்த தோல்வி சதவீதம் நிச்சயம் மலையாளத் திரையுலகை அசைத்துப் பார்த்திருக்கிறது. கன்டென்ட் ரீதியாக மலையாள திரையுலகம் மற்ற மொழி ரசிகர்களாலும் திரையுலகை சேர்ந்தவர்களாலும் பாராட்டப்பட்டு வரும் வேளையில், அங்கேயும் கடந்த வருடம் இப்படி அதிகபட்ச தோல்வி படங்கள் வெளியாகியிருப்பது அதுவும் மற்ற மொழி திரையுலகங்களை போன்று தானோ என்றே நினைக்க தோன்றுகிறது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.