உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று (05) பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனால் பாராளுமன்றத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்த தனிப்பட்ட பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.
இருப்பினும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன்போது பிரதமர் தினேஸ் குணவர்தன இதுதொடர்பில் கருத்து தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவும் கரத்துக்களை தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த பிரேரணையால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு எந்த தடையும் ஏற்படாது என்று குறிப்பிட்டார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.