புதுடில்லி, வெளிநாட்டு பயணியரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், உருமாறிய ‘ஒமைக்ரான்’ வகை தொற்றில், 11 விதமான துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, நம் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.
வெளிநாடுகளில் இருந்து வரும் ஒவ்வொரு விமானத்திலும், 2 சதவீத பயணியருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தொற்று உறுதியாகும் நபர்களின் மாதிரிகள், மரபணு மாற்ற வரிசைமுறையை கண்டறியும் பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த மாதம், 24 முதல் ஜன., 3ம் தேதி வரை நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில், 19 ஆயிரத்து 227 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 124 பேருக்கு தொற்று உறுதியானது.
இதை மரபணு மாற்ற வரிசைமுறை பரிசோதனைக்கு அனுப்பியதில், உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றில், 11 விதமான துணை வகைகள் கண்டறியப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement