புதுடெல்லி: டெல்லியில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கன் நாட்டில் இந்து குஷ் பகுதியை மையமாக கொண்டு நேற்று இரவு 7.55 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகள் பதிவாகி இருந்தது. இதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.