திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபமலை உச்சியில் தடையை மீறி நேற்று முன்தினம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்றனர். இதையறிந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அவர்கள் தீபமலையை டிரோன் மூலம் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த வனத்துறையினர், அவர்கள் பயன்படுத்திய அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட டிரோனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், டிரோன் பறக்கவிட்டவர் ரஷ்யாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சர்ஜி என்பதும், மற்ற இருவரும் அவருடன் வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.இந்நிலையில் உரிய அனுமதியின்றி மலை மீது ட்ரோன் பறக்க விட்ட குற்றத்துக்காக ரஷ்ய வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று வனச்சரகர் சீனுவாசன் உத்தரவிட்டார்.