திருவனந்தபுரம்: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்ட விரோதமாகும். வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் அவர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என்று கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் தரக் கூடாது. ஆனால் கடந்த வருடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களை ஊக்குவிப்பது போல் அமையும் என்று உத்தரவிட்டனர்.