தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நேற்றிரவு கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து மலையேறி சென்று, இரவு மலையில் தங்கிய அவர், இன்று காலை விஜபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலைக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டு, வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.