அரசியல் செய்ய விரும்பவில்லை… உத்தரவை திரும்ப பெறுங்கள்.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்..!!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த ஒப்பந்த செவிலியர்கள் தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தமிழக முழுவதும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னயில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்பொழுது போராட்டக் குழுவினருடன் பேசிய அவர் “கொரோனா மருத்துவமனையாக ஓமந்தூரார் மருத்துவமனையை அமைத்துவிட்டு பார்த்தால் செவிலியர்கள் யாரும் அங்கு இல்லை. கொரோனாவுக்கு பயந்து நிறைய பேர் வேலைக்கு வர மறுத்தனர். சவாலான காலகட்டத்தில் பணியில் இருப்பவர்களை பயந்து ஓடிய நிலையில் தங்கள் உயிரை துச்சம் என நினைத்து அனைவரின் உயிரையும் காப்பாற்றியவர்கள் தான் இந்த செவிலியர்கள்.

அதனால்தான் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களை இங்கு அனுப்பியுள்ளார். டிஎம்எஸ் வளாகத்திலும் வள்ளுவர் கோட்டத்திலும் செவிலியர்களை போராட்டம் செய்யும் நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது. உங்களை விதிமீறலால் பணியமத்தப்பட்ட பணியாளர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது வேதனையாக இருந்தது. ஆயிரம் செவிலியர்களுக்கு பணியானை அனுப்பினாலும் 100 செவிலியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர்.

அவ்வாறு அழைக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்துவது கோஷம் போடுவது இந்த ஆட்சிக்கு ஆபத்தான ஒன்று. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து 12 மணி நேரமும் கவச உடைய அணிந்து சிகிச்சை அறையில் இருப்பாரா..?? கழிவறை செல்ல முடியாது, குடும்பத்தை பார்க்க முடியாது, நெருக்கடியான காலகட்டத்தில் தேர்வு எழுதி மருத்துவத் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மெரிட்டில் தேர்வானவர்கள். மிகப் பெரிய பாவத்தை இந்த அரசு செய்கிறது. இந்த விஷயத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசியலைத் தாண்டி கட்சி பேதத்தை தாண்டி கூறுகிறோம்.

பணியில் இருக்கும்போது எத்தனை பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. அதனை பொறுப்பேடுத்தாமல் மக்களுக்காக சேவையாற்றினர். கலகத் தலைவன் படம் நன்றாக இருக்கிறதா..?? என்று கேட்கும் முதல்வர் ஸ்டாலின் என்றாவது நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டிருப்பாரா..?? என போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.