லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர்

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்ற லிப்டில் அமைச்சர் சிவசங்கர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தரைத்தளத்திலுள்ள குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் கலைத்திருவிழா போட்டிகள் நேற்று காலை நடந்தது. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பரிசளித்தார்.

பின்னர் 11 மணியளவில் அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் 2வது தளத்தில் நடந்த கூட்டுறவுத்துறை விழாவில் பங்கேற்பதற்காக லிப்டில் ஏறினர். அப்போது சிறிது தூரம் சென்ற லிப்ட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நடுவழியில் நின்று விட்டது. சுமார் 10 நிமிடம் கழித்து லிப்ட் மீண்டும் தரைத்தளத்திற்கு கீழே வந்து நின்றது. அதிலிருந்து அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வெளியே வந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.