புதுச்சேரி கோபாலன் கடை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜா (29) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த, வில்லியனூர் போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கொலையான ராஜா கார் டிரைவராக பணிபுரிந்து வந்ததும், அவருக்கு அம்சா (36) என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
மேலும், ராஜா மீதுள்ள வழக்கிற்கு பழிதீர்க்கும் வகையில் அவரை கொலை செய்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in