புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று துவங்கிய ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ – 2023’ மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் முதல் நாளான நேற்று ஏராளமான மக்கள் உற்சாக மாக ‘ஷாப்பிங்’ செய்ய ஆர்வமுடன் வந்திருந்தனர்.
புதுச்சேரி தினமலர் நாளிதழ் – சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் ‘ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ -2023, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, கடலுார் சாலை கோர்ட் எதிரில் உள்ள ஏ.எப்.டி., மைதானத்தில் நேற்று கோலாகலமாக துவங்கியது. இக்கண்காட்சி வரும் 9ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. கண்காட்சி துவங்கிய முதல் நாளிலேயே மக்கள் உற்சாகமாக ‘ஷாப்பிங்’ செய்ய ஆர்வமுடன் வந்திருந்தனர்.
குளு குளு அரங்கம்
‘ஏசி’ வசதி செய்யப்பட்ட, ஒரே கூரையின் கீழ், வீட்டு உபயோகப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் என, மூன்று அம்சங்களும் இணைந்த கண்காட்சியை தினமலர்- சத்யா நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ளது. உள்ளூர் ஸ்டால்கள் மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட வெளி மாநில ஸ்டால்களும், தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்நாம், கென்யா போன்ற வெளிநாட்டு ஸ்டால்களும் இடம் பெற்றுள்ளன.
சலுகையில் ‘ புதுசு’
வேறு எங்கும் கிடைக்காத, ஏராளமான பொருட்கள் தினமலர் கண்காட்சியில் விற்பனைக்கு குவிந்துள்ளன. அதுவும் சலுகை விலையில் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல். புதுப்புது மாடல் ‘டிவி’க்கள், ஸ்மார்ட் மொபைல் போன்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஏ.சி., பிரிட்ஜ், ஸ்டவ், பாத்திர வகைகள், இறக்குமதி செய்யப்பட்ட ஷோபா செட்கள், நாற்காலிகள், டிரஸ்ஸிங் டேபிள்கள், வகை வகையான கட்டில்கள், நவீன ரெடிமேட் ஆடை வகைகள், போர்வைகள், ஸ்கிரீன் துணிகள், மசாலா பொருட்கள், உணவு மிக்ஸ்கள், வடமாநில ஊறுகாய் வகைகள், வாட்டர் ஹீட்டர்கள், பாத்ரூம் பிட்டிங்ஸ் என ஏராளமான வகைகளை ஆபர்களுடன்நீங்கள் ஷாப்பிங் செய்து, அள்ளிச் செல்லலாம்.
மகளிர் ஸ்பெஷல்
குடும்பத்துடன் ஷாப்பிங் வரும் பெண்கள், இது எங்கள் ஏரியா’ என பொருட்களை தேர்வு செய்து வாங்க, நிறைய ஸ்டால்கள் இருக்கின்றன. சமையல் அறை பொருட்கள், புதுவிதமான பாத்திரங்கள், பல மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் ஆடைகள் மற்றும் காலணிகள், பேன்சி பேக், டிசைனர் நகைகள், காய்கறி கட்டர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆம் பெண்களே… அத்தனையும் உங்களுக்காக… ‘எனக்கே… எனக்கு’… என, ஆசையோடு வாங்கிச் செல்லலாம்.
கனவு இல்லம்
சொந்த வீடு கனவில் இருப்பவர்கள் உடனே புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானத்திற்கு புறப்பட்டு வாருங்கள். முன்னணி ‘ரியல் எஸ்டேட்’ நிறுவனங்கள் ஸ்டால் அமைத்து, தாங்கள் கட்டித் தரும் வீடுகளைப் பற்றி விளக்கம் அளிக்க காத்திருக்கின்றன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி, ஒரு வீட்டை உறுதியாக நீங்கள் தேர்வு செய்து விடலாம். இந்த வாய்ப்பு எங்கும் கிடைக்காது. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆட்டோமொபைல்ஸ்
ஒரே கூரையின் கீழ் அனைத்து மாடல் கார்களையும், டூவீலர்களையும் பார்த்து, பொறுமையாக தேர்வு செய்ய ஏற்ற வகையில், தனியாக ‘ஆட்டோமொபைல்ஸ்’ பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் நீங்கள், ஒவ்வொரு வாகனமாக தேடி அலைய வேண்டியதில்லை. புக்கிங் சலுகையுடன் ஓட்டிகிட்டு போகலாம்.
சூப்பர் கிட்ஸ் கேம்ஸ்
குழந்தைகள் ஓடி, ஆடி, விளையாடி கும்மாளம் போட, குட்டி விளையாட்டு உலகம் கண்காட்சி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. குட்டி ரயில், வாட்டர் போட், பிக் பன் சிட்டி, வில்லேன் கேம், ஒட்டக சவாரி, 3டி தியேட்டர், ட்ரம்போலின் என நாளெல்லாம் துள்ளி குதித்து விளையாட அட்டகாசமான பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதனால், நீங்கள் வரும் போது கண்டிப்பாக குழந்தைகளை அழைத்து வர மறக்காதீர். உங்கள் குழந்தைகள் ஒரு தீம் பார்க்கிற்கு வந்ததை போல, உணரப்போவது நிச்சயம்.
விதவிதமான உணவுகள்
‘ஷாப்பிங்’ முடித்து அரங்கை விட்டு வெளியே வரும் போது அருகாமையிலேயே ‘புட்கோர்ட்’ உள்ளது. அங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் சுடச்சுட காத்திருக்கின்றன. சூடான உணவுகளை சுவைத்த பின் ஐஸ் கிரீம் வகைகளை சாப்பிட்டு இனிப்பான அனுபவங்களை பெறலாம்.
காலையிலேயே வாங்க
புதுச்சேரி ஏ.எப்.டி.,திடலில் கடல் போல பரந்து விரிந்திருக்கும் ‘ஏசி’ அரங்குகளில் ஏராளமான ஸ்டால்களில் வித விதமான பொருட்கள் லட்சக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன. கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல, கண்காட்சியில் மூழ்கி நினைத்த பொருட்களை எல்லாம் சலுகை, தள்ளுபடியில் அள்ளி கொண்டு போகலாம். காலையிலேயே வந்தால் கூட்ட நெரிசல் இல்லாமல் ‘குளு குளு’ அரங்குகளில் நிதானமாக ஷாப்பிங் செய்யலாம்.
இப்போ தவற விட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்…என்ன குடும்பத்துடன் கிளம்பிட்டீங்களா….
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்