உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென மரணம்..!

மத்தியப் பிரதேசத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த உணவக உரிமையாளர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்தூரில் உள்ள உணவக உரிமையாளரான பிரவீன் ரகுவன்ஷி என்பவர் அருகில் இருந்த உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ரகுவன்ஷியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.