நொய்டா, உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், கார் மோதியதில் பலியான தனியார் நிறுவன உணவு ‘டெலிவரி’ ஊழியரின் உடல், 1,500 அடி துாரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி., மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த கவுஷல், ‘ஆன்லைன்’ வாயிலாக உணவு ‘டெலிவரி’ செய்யும் ‘ஸ்விக்கி’ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 31-ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு பிறந்ததை அடுத்து, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், இவர் மீது மோதியது.
இதனால் தடுமாறி விழுந்த கவுஷல், காருக்கு அடியில் சிக்கியதை அடுத்து, 1,500 அடி துாரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு பலியானார்.
விபத்து குறித்து அறிந்த கார் டிரைவர், கவுஷலின் உடலை அப்புறப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்திலேயே, புதுடில்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கி, 12 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டு பலியான அதிர்ச்சி விலகும் முன், நொய்டாவிலும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement