மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ''ஸ்மார்ட்  செயலகம்''   தொடர்பான  அறிவூட்டல் பயிற்சி நெறி!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின்  ஸ்மார்ட்  செயலகம் எண்ணக்கருவிலான இணையத்தள சேவையை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நிகழ்வு  (05) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

இப்பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் ஆறுமுகம் நவேஷ்வரன்  தலைமையிலும் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் லக்சிகா தீசன் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. 
 
இதன்போது இவ்வருடத்திலிருந்து (2023) ஸ்மார்ட்  செயலகம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இருப்பு கணக்கெடுப்பு, கேட்போர் கூட முன்பதிவு மற்றும் தபால் முகாமைத்துவ முறைமை என்பன தொடர்பாக மாவட்ட செயலகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவினால் பயிற்சி அளிக்கப்பட்டது.
 
அத்துடன் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரசாங்க நிருவாக நடவடிக்கைகளை கணக்கெடுக்கும் முறைமை ஊடாக அலுவலர்கள் தொடர்பான விடுமுறை, தினக்குறிப்பேடு, மற்றும் வேலை முன்நிகழ்ச்சித் திட்டம் போன்றவற்றை பின்பற்றுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. 
 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஸ்மார்ட்  செயலகம் எண்ணக்கரு முன்னாள் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில்  மாவட்ட செயலகத்தின் அனைத்து  பதவிநிலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செயலகத்தின்  உத்தியோகத்தர்கள் பலரும்  கலந்துகொண்டனர். 

M M Fathima Nasriya

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.