ஒன்றுக்கு இரண்டு மகள்கள் இருந்தும் கவனிக்க ஆள் இல்லையே! மனமுடைந்து தம்பதி தற்கொலை


குடும்பத்தில் இரண்டு மகள்கள் இருந்தும் கவனிக்க யாருமில்லையே என்ற விரக்தியில் தம்பதி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயதான தம்பதி

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி முருகேசன் (65), பாப்பா (60). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்த நிலையில், அவரவர்கள் கணவருடன் தனித்தனியே வாழ்ந்துவருகின்றனர்.

வயதான தம்பதி, அப்பளம் போடும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்துவந்துள்ளனர். அதில் கிடைத்த கூலிப் பணத்தை வைத்து, காலத்தை நகர்த்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே , இருவருக்கும் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

ஒன்றுக்கு இரண்டு மகள்கள் இருந்தும் கவனிக்க ஆள் இல்லையே! மனமுடைந்து தம்பதி தற்கொலை | Parents Died Suicide Daughters

தற்கொலை

மகள்கள் இருவரும் எங்களைப் பார்த்துகொள்ளவில்லை, மருத்துவ சிகிச்சை எடுக்க உதவவில்லை என்று இருவரும் அக்கம்பக்கத்தினரிடம் புலம்பிவந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு மகள்கள் இருந்தும் தங்களைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என மனமுடைந்த தம்பதி, நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து, பொலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.