வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உயர்தர சத்தான உணவு வழங்குவதற்காக சரியான உணவு வழங்கும் நிலையம் என்ற 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்கும் ரயில் நிலையங்களுக்கு FSSAI மூலம் சான்றிதழ் வழங்கப் படுகிறது.
இதன்படி டெல்லி ஆனந்த விஹார் டெர்மினல் ரெயில் நிலையம் ,மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல், மும்பை மத்திய ரயில் நிலையம்; வதோதரா, சண்டிகர் மற்றும் போபால் ரயில் நிலையங்கள் நட்சத்திர சான்றிதழைப் பெற்ற மற்ற ரயில் நிலையங்கள் ஆகும்.
FSSAI சார்பில் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் ஒன்று முதல் 5 வரையிலான மதிப்பீடுகளுடன் ரயில் நிலையங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.