சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து, ரஜினி டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். டாக்டர் படம் வெற்றியடைந்த நிலையில், பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. மாறாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
இதனால், ரஜினி படத்தில் இருந்து நெல்சன் வெளியேற வாய்ப்புள்ளது என தகவல் வெளியான நிலையில், அதனை பொய்யாக்கும் விதமாக படத்தின் பெயர் வெளியிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஜெயிலர் என பெயரிடப்பட்ட இப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் காட்சிகள் ரஜினியின் பிறந்தநாளான டிச. 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினி மட்டுமின்றி, படையாப்பாவில் நீலாம்பரியாக அவருடன் போட்டிபோட்டு நடித்த ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளார். மேலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, யோகி பாபு, பிரியங்கா மோகன் ஆகியோர் படத்தில் நடித்து வந்த நிலையில், இப்படத்தின் அப்டேட்கள் ஏதும் வெளிவராத நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் இப்படத்தின் மற்றொரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்பபடத்தில் நடித்துள்ள நிலையில், மோகன்லாலும் இணைந்தால் படம் பிரம்மாண்ட அளவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மோகன்லால் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு வரும் ஜன. 8, 9ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில், ரஜினி, மோகன்லால் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படலாம் என தெரிகிறது.
As per rumours making the round in Kerala,@Mohanlal will do a cameo in #SuperstarRajinikanth’s #Jailer.
No official confirmation so far! #Jailer @rajinikanth #Mohanlal pic.twitter.com/F8lLQsJE94— Sreedhar Pillai (@sri50) January 6, 2023
ரஜினி படத்தில் சிறப்பு தோற்றத்திலோ அல்லது முக்கிய கதாபாத்திரங்களிலோ மற்ற மொழியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துள்ள நடிகர்கள் நடிப்பது புதிதில்லை என்றாலும், மோகன்லால், ரஜினியோடு நடிப்பது இதுவே முதல்முறை.
ரஜினியுடன் இதற்குமுன், சிரஞ்சீவி, மம்மூட்டி, அக்ஷய் குமார், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது லால் ஏட்டனும் இணைந்திருப்பது ரசிகர்களை குதுகலமடைய செய்துள்ளது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் இவ்
இருவர், சிறைச்சாலை, உன்னைப்போல் ஒருவன், அரண், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட தமிழ் படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். குறிப்பாக, கமல் உடன் உன்னைப்போல் ஒருவனுக்கு பிறகு ரஜினியுடனும் இணைந்து பணியாற்ற உள்ளார். ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றான சந்திரமுகி, மோகன்லால் நடித்த மணிசித்திரதாலு படத்தின் மறு ஆக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.