இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்


இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஜூலை மாதம் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நடததப்பட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் முதலாவது இலங்கை விஜயம் இதுவாகும். எனினும் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் | Indian External Affairs Minister Visiting Lanka

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் அத்தியவசிய உணவு, மருந்து உட்பட அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா இதுவரை நான்கு பில்லியன் டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது.

இதனை தவிர இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் துறைமுகங்கள் மற்றும் மின்சக்தி போன்ற துறைகளில் முதலீடுகளை விரிவுப்படுத்த தேவையான பல அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் வடக்கு மற்றும் தென்னிந்திய துறைமுகங்களுக்கு இடையில் கப்பல் சேவைகளை நடத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இலங்கை வரும் முதலாவது உயர் மட்ட ராஜதந்திரி

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் | Indian External Affairs Minister Visiting Lanka

இவ்வாறான சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது உயர் மட்ட ராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த மாதம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

அதேவேளை இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதானி புனித் அகர்வால் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

இதன் போது, துறைமுகம், கப்பல், விமான சேவைகள், வெளிவிவகாரம், மின்வலு மற்றும் எரிசக்தி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 

 இதற்கு முன்னர் இந்திய றோ புலனாய்வு அமைப்பின் பிரததான் சமன்த் குமார் கோயல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்படம இலங்கையில் உயர் மட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் உத்தியோகபூர்வமற்ற தலைவருமான பசில் ராஜபக்சவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது இரண்டு நாடுகளும் இணங்கிய துறைகளின் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் மீளாய்வுகளை செய்ய எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.