'தமிழ்நாடு'-ன்னு ஏன் சொல்றோம் – அமைச்சர் பொன்முடி விளக்கம்

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய கருத்துக்கு கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ஆர். என், ரவி அவரது வேலையை மட்டும் பார்க்காமல் அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார் என்றும் பாஜகவின் கொள்கைகளை பரப்புவதை விட்டுவிட்டு உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இதற்கு பலரும் எதிர்வினையாற்றி வரும் நிலையில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேட்டி கருத்து தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது;

தமிழ்நாடு என்பது சட்டமன்றத்திலையே நிறைவேற்பட்ட கருத்து அது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் அரசியலமைப்பில் தமிழ்நாடு, தமிழகம் என்ன வித்தியாசம் உள்ளது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தின் போதே கூட்டாட்சியை ஒற்றை ஆட்சியாக உருவாக்க வேண்டும் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது அம்பேத்கர் யூனியன் ஆப் ஸ்டேட் என்று கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் தான் யூனியன் ஆப் ஸ்டேட் என்பதை கூறுகிறோம். ஸ்டேட் என்றால் நாடு யூனியன் என்றால் ஒன்றியம் அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு என்று கூறுகிறோம்.

அரசியலமைப்பின் படி செயல்படுகிற ஒரு முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் எந்த வேறுபட்ட கருத்துமில்லை. அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு என்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை அது தான் உண்மையான கருத்து. ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை அவர் பல்வேறு நிகழ்வுகளில் பேசி வருகிறார். தமிழ்நாடு என்பது சரியான வார்த்தை அதில் எந்த தவறும்மில்லை சட்டமன்றத்திலையே நிறைவேற்றப்பட்ட கருத்து.

மஷாராஷ்டிராவில் ராஷ்ரா என்றால் நாடு என்று அர்த்தம். ஏதோ ஒரு எண்ணத்திற்காக அவர் சொல்லி இருக்கிறார் அதையெல்லாம் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். ஜனகனமனகதி என்ற பாடலிலையே திராவிடம் என்ற சொல் வந்துள்ளது.

அந்த அடிப்படையில் தான் தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதாகவும், ஆளுநரை வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழக அரசு என்ன செய்கிறதோ அதை நியமன பதவியிலுள்ள ஆளுநர் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்வதாக கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.