வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘ஏர் இந்தியா’ விமானத்தில், 70 வயது பெண் பயணி மீது, குடிபோதையில் இருந்த ஷங்கர் மிஸ்ரா என்ற சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஷங்கர் மிஸ்ரா தாம் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ., 26ல் புறப்பட்டது. அப்போது, ‘ சக பயணி ஒருவர் குடிபோதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்த புகாரில், அந்த சக பயணி, ஷங்கர் மிஸ்ரா என தெரியவந்தது.
இந்த விவகாரத்தை ஏர் இந்தியா ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டில்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறு நீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பதுதெரியவந்தது. அவருக்கு டில்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் போதை ஆசாமி ஷங்கர் மிஸ்ரா பணியாற்றி வரும் ”வெல்ஸ் பேர்கோ ” என்ற பன்னாட்டு நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றது. ஷங்கர் மிஸ்ராவின் செயல் அநாரீகமானது, இது தங்களின் நிறுவனத்திற்கு பெரும் அவமானம் என கருதி ஷங்கர் மிஸ்ராவை இன்று பணி நீக்கம் செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement