மின் பேருந்துகள் தயாரிப்பு: ரூ.5000 கோடி மதிப்பில் டெண்டர் வெளியீடு!

நமது நாட்டில் எரிபொருள் இறக்குமதி, கார்பன் உமிழ்வு, காற்று மாசுபாடு ஆகியவற்றை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக CESL(Convergence Energy Services Ltd) என்னும் பொது நிறுவனம் 4,675 மின்பேருந்துகளை தயாரிக்கும் டெண்டரை வெளியிட்டுள்ளது.

4,675 மின்பேருந்துகளை தயாரிக்கும் டெண்டர் CESL நிறுவனம் வெளியீடு!

டெல்லி, கேரளா மற்றும் தெலுங்கானாவில் உள்ள மாநில போக்குவரத்து துறைகள் “ட்ரை லீஸ்( dry lease)” என்ற முறையில் 4,675 மின்பேருந்துகளை பயன்படுத்த உள்ளனர். இந்த டெண்டரின் மொத்த மதிப்பு ரூ.5,000 கோடி ஆகும்.

ட்ரை லீஸ் என்றால் என்ன?

ட்ரை லீஸ் என்றால் என்ன? டெண்டர் எடுக்கும் நிறுவனம் மாநில போக்குவரத்து துறைக்கு மின்பேருந்துகளை தயாரித்து தந்துவிடும். இந்த பேருந்துகளை மாநில போக்குவரத்து துறைகள்தான் இயக்கும். மேலும் இந்த பேருந்துகளுக்கான ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களையும் மாநில போக்குவரத்து துறையேதான் நியமிக்கும். ஆனால் இந்த பேருந்துகளுக்கான பரமாரிப்பு செலவுகள் மற்றும் பிற செலவுகளை டெண்டர் எடுக்கும் நிறுவனம் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பேருந்துகளை இயக்க மாநில போக்குவரத்துத்துறை இந்த நிறுவனத்திற்கு, பேருந்து ஒன்றுக்கு இவ்வளவு தொகை என மாதத்தொகை கொடுத்துவிடும். இந்த டெண்டர் 10 முதல் 12 ஆண்டுகாலம் வரை நீடிக்கும்.

தேசிய மின்பேருந்து திட்டதின்கீழ் மின்பேருந்துகள் தயாரிப்பு டெண்டர்!

தற்போது CESL அறிவித்துள்ள இந்த டெண்டர், தேசிய மின்பேருந்து திட்டதின்கீழ் அறிவித்த இரண்டாவது டெண்டர் ஆகும். இதுவரை இந்த நிறுவனத்தின் சார்பாக மூன்று மின்பேருந்துகள் டெண்டர் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் 5,450 மின்பேருந்துகளுக்கான முதல் டெண்டர் முடிவானது. அடுத்ததாக, கடந்த செப்டம்பர் மாதம் 5,645 மின்பேருந்துகளுக்கான இரண்டாவது டெண்டர் விடப்பட்டது. பிப்ரவரி மாதம் நடந்த டெண்டரில் 5,000 மின்பேருந்துகளுக்கான டெண்டரை டாடா மோட்டர்ஸ் நிறுவனம் எடுத்திருந்தது. அடுத்த டெண்டரில் 2,600 மின்பேருந்துகளுக்கான டெண்டரை அசோக் லேலாண்டின் துணை நிறுவனமான Switch Mobility நிறுவனம் எடுத்திருந்தது. சில கட்டண பிரச்னை காரணமாக, இந்த டெண்டரில் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் கலந்துகொள்ளவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.