சென்னை: தேவையற்ற பொருட்களை போகி பண்டிகை அன்று எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்த்து வரும் 8 முதல் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம் என்று மாநகராட்சி கூறியுள்ளது, சென்னை மாநகராட்சியில் 13,14ல் பழைய துணி, டயர், ரப்பர், டியூப், பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.