”நீட் தேர்விலிருந்து விலக்கு பெறக்கூடாது என்பதே இபிஎஸ்-ன் எண்ணம்” – மா.சுப்பிரமணியன்

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தார்.இந்த சந்திப்புக்கு பின் அமைச்சர் சுப்பிரமணியன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் நிறுவ வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்உக்ரைனில் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்முந்தைய ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லைபழனிசாமிக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதுஈஷா யோகா மையத்தில் இறந்த பெண்ணின் உடற்கூராய்வு 100% முறையாக இருக்கும்”
என பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.