'பெரும் அவமானம்' – விமானத்தில் சிறுநீர் கழித்தவரை டிஸ்மிஸ் செய்தது அமெரிக்க நிறுவனம்

ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கிய நபர், தாம் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ‘ஏர் இந்தியா’ விமானம் கடந்த நவம்பர் 26ல் புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடிபோதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்த புகாரில் அந்த சக பயணி ஷங்கர் மிஸ்ரா என தெரியவந்தது.

image
இந்த விவகாரத்தை ஏர் இந்தியா ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால் விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுநீர் கழித்த நபரின் பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் ஷங்கர் மிஸ்ரா பணியாற்றி வரும் ‘வெல்ஸ் பேர்கோ’ (Wells Fargo) என்ற அமெரிக்க நிதிச் சேவை நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றது. இதனைத் தொடர்ந்து, ஷங்கர் மிஸ்ராவின் செயல் அநாரீகமானது, இது தங்களின் நிறுவனத்திற்கு பெரும் அவமானம் என கருதி ஷங்கர் மிஸ்ராவை இன்று பணி நீக்கம் செய்தது. இதற்கிடையே ஷங்கர் மிஸ்ராவை கைது செய்யும் நடவடிக்கைகளில் டெல்லி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.