பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை கட்டாயம் கடைடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த தேர்வினை ஏறக்குறைய 8 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
பள்ளிக்கல்வி துறையும் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வினை நடத்தி முடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் தான் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும், பள்ளி கல்வித் துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பிளஸ் 2 எழுத உள்ள மாணவ, மாணவிகள் தங்களையே தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வி துறை தற்போது முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி 2022 – 2023ம் கல்வி ஆண்டில் ‘நான் முதல்வன் திட்டம்’ சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்க் கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணைய தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் மூலமாகவே மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. எனவே ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்று என பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது.
எனவே 12ம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரியை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன் உருவாக்க தக்க நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மின்னஞ்சல் உருவாக்கிய பின்னர் உள்நுழைவது எப்படி? பெறப்பட்ட மின்னஞ்சலை திறப்பது மற்றும் படிப்பது குறித்த விளக்கத்தை மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் கற்பிக்க வேண்டும்.
இதற்காக மாணவர்கள் கடவு சொல்லை (password) எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் இந்த செயல்பாட்டினை அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் ஜனவரி 09ம் தேதி முதல் 12ம் தேதி வரை Hi tech லேப் கணினிகளை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் திடீரென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.