லாரி அடியில் சிக்கி வியாபாரி பலி ஒரு கி.மீ., இழுத்துச் செல்லப்பட்ட உடல்| The trader was trapped under the truck and his body was dragged for a km

சிலிகுரி மேற்கு வங்கத்தில், லாரிக்கு அடியில் சிக்கிய வியாபாரி, ஒரு கி.மீ., துாரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில், சிலிகுரி பகுதியைச் சேர்ந்த அனந்த தாஸ் என்பவர், வியாபாரத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு, தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி, தாஸ் மீது மோதியது.

இதில், லாரியின் அடியில் சிக்கிய அவர், 1 கி.மீ.,துாரத்துக்கு வாகனத்துடன் இழுத்துச் செல்லப்பட்டார். பின், இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததில் வியாபாரி உடல் கருகி பலியானார். விபத்து குறித்து விசாரணை நடத்தியபோலீசார், லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.

புதுடில்லியில் புத்தாண்டு அன்று, அஞ்சலி என்ற இளம்பெண், காரில் சிக்கி 12 கி.மீ., இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக பலியான சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், அதேபோன்ற சம்பவம் மேற்கு வங்கத்திலும் அரங்கேறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.