டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநில தலைமை செயலாளர்களின் மாநாடு தொடங்கியது.
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களின் துணையுடன் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்து மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
உள்கட்டமைப்பு, முதலீடுகள், சுகாதாரம், ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. முக்கியமான கொள்கைகள் தொடர்பாகவும், அணியாக ஒன்றிணைந்து நாட்டை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வது குறித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.