தமிழகத்தில் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த கல்வியாண்டுக்கான பொது தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.
இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு துறை இணையதளத்தில் இருந்து பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் 12ஆம் தேதிக்குள் இதற்கான பணிகளை முடிக்கவேண்டும் என்றும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மாணவர்களின் மின்னஞ்சல் தேவைப்படுவதால், அரசு பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.