பீஜிங்: சீனாவில் கொரோனா பலிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட் சீனாவில் இருந்து எப்போதுமே சரியான தகவல்கள் வெளிவராது. உலகை புரட்டிப்போட்ட கொரோனா சீனாவில் இருந்து தான் பரவியது. தற்போது அது சீனாவை மீண்டும் கலங்கடித்து வருகிறது. இதனால் உலக சுகாதார அமைப்பிற்கு தினசரி கொரோனா புள்ளி விவரங்கள் வழங்குவதை சீனா நிறுத்தியுள்ளது.
டிசம்பரில் 22 கொரோனா இறப்புகளை மட்டுமே அறிவித்துள்ளது. ஆனால் பிரபல பாடகி சுலான்லான், நடிகர் கோங் ஜிண்டாங் போன்றோர் பலியாகியுள்ளார். ‘இன்-லாஸ், அவுட்-லாஸ்’ என்ற டிவி தொடரில் நடித்த காங்கும் பலியாகியுள்ளார். இப்படி பிரபலங்களின் மரணம் சீனாவிற்கு
சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 5,259 ஆக உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களை வைத்து ஆய்வு செய்ததில் இறப்பு பல மடங்கு இருக்கும் என தெரிகிறது.
பீஜிங்கில் நோயாளிகள், வயதானவர்கள், நடைபாதையில் ஸ்ட்ரெச்சர்களில் படுத்துள்ளனர். சக்கர நாற்காலியில் அமர்ந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் பரவி வருகின்றன. நாளுக்குநாள் பலி அதிகரித்து வருவது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
உண்மை நிலையை சீனா வெளியிடவில்லை. ஆனால் சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், நாடு கொரோனா பாதிப்பு
விவரங்களை உலக
சுகாதார அமைப்புடன் பகிர்ந்து கொள்வதாக நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அரசின் கொரோனா கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அலைபேசி எண்களின் தரவுகள் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement