ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் உள்பட ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான, பல நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த கூடாது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.