அமெரிக்காவில் ஆயுள் காப்பீட்டு ஊழியர் ஒருவர் தனது 5 குழந்தைகள், மனைவி, மற்றும் மாமியார் என 7 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழகிய குடும்பம்
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஈனாக் நகரை சேர்ந்த மைக்கேல் ஹெய்ட்(42) என்ற நபர் ஆயுள் காப்பீட்டு ஊழியராக பணியாற்றி வருகிறது.
இவருக்கு டவுஷா(40) என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகள் சேர்த்து மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களுடன் மனைவி டவுஷாவின் தாய் கெய்ல் எரால் என்பவரும் சேர்ந்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர்.
துப்பாக்கி சூடு
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கணவன் மைக்கேல் ஹெய்ட்-விற்கும் மனைவி டவுஷாவுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையாக வெடித்து வந்துள்ளது.
இதனால் விரக்தியடைந்த மனைவி டவுஷா கணவரிடம் இருந்து பிரிந்து வாழ விவாகரத்து கோரியுள்ளார், அதற்கான நீதிமன்ற மனு தாக்குதலையும் செய்துள்ளார்.
மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவன் மைக்கேல் ஹெய்ட்(42) கடந்த புதன்கிழமை தனது மனைவி, 5 குழந்தைகள், மற்றும் மாமியார் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த 5 குழந்தைகளும் 4 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும், அவர்கள் அருகில் இருந்த பள்ளியில் பயின்று வந்தனர் என்று தெரியவந்துள்ளது.
இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.