ஈரோடு: பவானிசாகர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானையை பிடிக்கும் பணி 2வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. யானை செல்லும் வழித்தடங்களில் மக்கள் நடமாட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கோபிசெட்டிபாளையத்திலிருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக பவானி ஆற்றை யானை கடந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.