சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. எட்டாக்காப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதே பட்டாசு ஆலையில், சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவரின் மனைவி பத்மாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஒரே பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில், கருப்பசாமியும், பத்மாவும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வி.குமாரலிங்கபுரத்தில் வசித்துவரும் பத்மாவின் மாமியார், தான் விரதமிருந்து கோயிலுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவதாக பாண்டிசெல்வத்திடம் தெருவித்திருக்கிறார். இதனால் தாயை வழியனுப்பி வைத்துவிட்டு வருவதாக கூறி, பாண்டிசெல்வம் மாலை வீட்டிலிருந்து வெளியே கிளம்பியுள்ளார். இந்நிலையில், பாண்டிச்செல்வம் வீட்டில் இல்லாததை, கருப்பசாமிக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பத்மாவின் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, அவருடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென வீட்டிற்கு திரும்பிவந்த பாண்டிசெல்வம், தனது மனைவி பத்மாவுடன், கருப்பசாமி தனிமையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த கட்டை மற்றும் கல்லால் அடித்துக் கொலை செய்தார். இந்தச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த கருப்பசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பாண்டிச்செல்வதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே, தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை கணவர், கல் மற்றும் கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.