உத்தராகண்ட் மாநிலத்தில் இடிந்து விழும் நிலையில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள்: 600 குடும்பங்களை வெளியேற்ற முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவு..!!

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்து  வரும் ஜோஷிமத் நகரத்தில் அபாயகரமான கட்டடங்களில் வசிக்கும் 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம், சமோனி மாவட்டத்தில் ரிசிகேஷ், பத்ரிநாத் தேசிய நெடுஞ்ச்சாலையில் அமைந்துள்ள சுற்றுலா நகரம் ஜோஷிமத் இமயமலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நகரத்தில் நிலநடுக்கங்களும், நில சரிவுகளும் தொடர்ந்து ஏற்படுவது வாடிக்கை.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு திடீரென ஜோஷிமத் நகரத்தின் ஒரு பகுதி பூமிக்குள் புதைய தொடங்கியுள்ளது. அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் எந்நேரத்திலும் அவை இடிந்து விழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. பல்வேறு வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறிவிட்டாலும். பலர் இடியும் நிலையில் உள்ள வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜோஷிமத் நகரத்தில் இருந்து 600 குடும்பங்களை உடனடியாக  வெளியேற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தராகண்ட் முதலமைச்சர்
புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். மெல்ல புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தை பேரிடர் மேலாண்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.