பெங்களூரின் முதல் ‘Director’s Cut’ தியேட்டருக்கு ஸ்பாட் விசிட் – இதில் அப்படியென்ன சிறப்புகள்?

இந்தியா மற்றும் இலங்கையில், சென்னை, கோவை, பெங்களூர், டெல்லி, மும்பை என 71 நகரங்களில், 176 தியேட்டர்களில், 846 திரைகள் பி.வி.ஆர் நிறுவனத்தின் கீழ் படங்களை வெளியிட்டு வருகின்றன. நிறையத் திரையரங்குகளைக் கொண்ட PVR Superplex, 3D மற்றும் 4K போன்ற அதிநவீன வசதிகளுடன் PVR IMAX, PVR Luxe என்ற பல வகையான தியேட்டர்கள் இதில் அடக்கம். இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ளதைப்போல இந்தியாவிலும், மிகவும் ஆடம்பரமான, ‘Director’s Cut’ தியேட்டர்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

‘Director’s Cut’ தியேட்டரில்…

இந்தியாவில் முதல் முயற்சியாக, ‘Director’s Cut’ தியேட்டரை டெல்லி மற்றும் மும்பையில் தொடங்கியவர்கள் கடந்த மாதம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரிக்கேட் ரோட்டிலுள்ள ஃபோரம் ரெக்ஸ் வாக் மாலிலும் அதைத் தொடங்கியுள்ளனர்.

இதுதான் தென் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ‘Director’s Cut’ தியேட்டர். இந்த ஒரு தியேட்டரில், The Lounge, The Gallery, The Grove, The Library மற்றும் The Venetian என்ற ஐந்து திரையரங்குகள் உள்ளன.

தியேட்டருக்கு செல்லும் வழி.

அப்படி என்னதான் சிறப்பு எனத் தெரிந்துகொள்ள இந்த தியேட்டருக்கு நேரில் பார்வையிட்ட நாம், இது குறித்த தகவலை பிவிஆர் மேலாண்மை இயக்குநர் அஜய் பிஜ்லி மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டோம்.

‘‘பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள ‘Director’s Cut’ தியேட்டரில், 4K லேசர் ப்ரொஜெக்‌ஷன் சிஸ்டம், 7.1 டால்பி சரவுண்ட் சிஸ்டம் மற்றும் ரியல்-டி 3டி தொழில்நுட்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான புதிய ரிலீஸ் படங்கள் வெளியிடப்படுகின்றன.

வரவேற்பறை

ஆடம்பரமான மிகவும் சௌகரியமான இருக்கைகள், மெல்லிய விளக்கு வெளிச்சம், ‘லைட்’ எனப் பல வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நீங்கள் படத்தைப் பார்த்துக்கொண்டு உங்களுக்குத் தேவையான, உயர்தர உணவுகளை ஆர்டர் செய்தால் போதும், உங்கள் இருக்கைக்கே கொண்டு வந்து தரப்படும். இதற்காக, திறமைமிக்க ‘செப்’கள் நியமிக்கப்பட்டு ’கிச்சன்’ உருவாக்கப்பட்டுள்ளது.

‘Director’s Cut’ தியேட்டரில்

தியேட்டரின் வரவேற்பறைகூட உயர்தர ‘பார்’ போன்ற வடிவிலும், மிளிரும் வண்ண வண்ண விளக்குகள், இருக்கைகள் என, மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பம், ஒலி அமைப்புகள் மூலம், தத்ரூபமாக, திரையிடப்படும் சினிமாவின் ‘ரியல்’ உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதுதான் இந்த ‘Director’s Cut’ தியேட்டரின் நோக்கம். இங்குச் சாதாரண தியேட்டரில் அமர்ந்து சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வு துளியும் இருக்காது. ஏனெனில், ஒவ்வொரு வடிவமைப்பிலும் சாதாரண தியேட்டரில் இருந்து வித்தியாசமான இருக்க வேண்டுமென்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. புதுவித அனுபவத்துடன் படம் பார்க்கலாம். டிக்கெட்கள் ஒரு நபருக்கு, 800 ரூபாயிலிருந்து தொடங்குகிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.