ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம் பெண் பரிதாப பலி| Young woman who ordered biryani online and ate it was a pathetic victim

காசர்கோடு
கேரளாவில், ‘ஆன்லைன்’ வாயிலாக பிரியாணி ‘ஆர்டர்’ செய்து சாப்பிட்ட இளம்பெண், உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீ பார்வதி, ௨௦.

இவர் சமீபத்தில் ஆன்லைன் வாயிலாக உள்ளூர் உணவகம் ஒன்றில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அந்த பெண்ணை, தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர்.

அதன்பின், கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிர் இழந்தார்.

இது குறித்து, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து, பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ”இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

”அந்த உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட மருத்துவ அதிகாரி விசாரணை நடத்துகிறார்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.