ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய 3 நகரங்களில் 5ஜி சேவையை முதல்வர் அசோக் கெலாட் துவக்கி வைத்தார்.
இதையடுத்து, அவர் கூறுகையில், டிசம்பர் 2023க்குள் ராஜஸ்தானின் கிராமங்களிலும் 5ஜி சேவைகள் கிடைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். 5ஜி நல்லாட்சிக்கான எங்கள் கனவை வலுப்படுத்தும். அதேநேரம், அதிகரித்துவரும் இணைய மோசடிகள், சவால்கள் குறித்து ஆன்லைன் பயனாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement