புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் குறித்த ஆண்டு தணிக்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், கடந்த 2021-2022ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.545.74கோடியாகும். இதில் ரூ.528.14கோடியானது தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கட்டணம், சந்தா மூலமாக ரூ.14.36கோடி வந்துள்ளது. வருமானத்தில் 96சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது. கடந்த 2020-2021ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கட்சியானது ரூ.42கோடி நிதியை பெற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.