பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஹிண்டலகா கிராமத்தில் வாகனம் ஒன்றில் ஸ்ரீராம் சேனை அமைப்பின் தலைவர் ரவி கோகிடகேரா மற்றும் அவரது வாகன ஓட்டுனர் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்த தாக்குதலில் ஸ்ரீராம் சேனை அமைப்பின் தலைவர் மற்றும் அவரது ஓட்டுனர் இருவரும் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பெலகாவி கிராமப்புற காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement