நாகர்கோவில்: உலகில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் விரும்பி வரக்கூடிய சுற்றுலாதலமாக அது மட்டுமின்றி அனைவராலும் பேசப்படக்கூடிய தலமாகவும் குமரி அமைந்து வருகிறது. இங்கு வர கூடிய அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இருந்துகொண்டேயா இருக்கும்.
குறிப்பாக மிகவும் சிறந்த சுற்றுலா சீசன் கருதப்படும் நவம்பர் 12ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரையிலான சபரிமலை சீசன் அனா சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டங்களும் அதிக அளவில் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வுகள் முடிந்ததால் கடந்த சில நாட்களாக கூட்டம் குறைவாக இருந்தது .
இன்று வார விடுமுறை மற்றும் சபரிமலை முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு வருவதால் இன்று அதிகமான சுற்றுலா பயணிகள் இன்று குமரி கடலில் அதிகாலை இயற்கை காட்சிகள் கண்டு ரசித்தார்கள் மேலும் முக்கடல் தண்ணீரில் நீராடியும் கடல் அலைகளில் தங்கள் குடும்பத்துடன் உற்சாகமாகவும், செல்பி எடுத்தும் தங்கள் குடும்பத்துடன் மக்கள் மகிழ்ந்து வந்தனர்.
அதை போல் நீண்ட வரிசையில் நின்று கடற்கரையில் அமைந்துள்ள அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்கள் மேலும் காந்தி மண்டலம் கோலம் கடற்கரை சாலை பகுதியில் அமைத்துள்ள கடைக்கு சென்று அவர்களுக்கு தேவையான சங்கு, பாசி, போன்ற வீடு அழகு சாதனங்கள் போன்ற பொருட்கள் வாங்கி சென்றார்கள்.