வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்தூர்: வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்த இந்திய இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சியை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஆண்டுதோறும் “பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு இன்று(ஜன.,08) முதல் ஜன.,10ம் தேதி வரை மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இன்று கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியவதாவது: புலம்பெயர் மக்களுக்கான நமது ஆதரவை அதிகப்படுத்துவதே எங்கள் முயற்சி. ஆன்லைன் வழிமுறைகள் மூலம் குறைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்த இந்திய இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சியை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டில் உள்ள சமூகத்திற்கும், நம்மிடையே உள்ள பிணைப்பின் தீவிரம் தான் தனித்தன்மை. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில், இந்திய புலம்பெயர் இளைஞர்களுக்கு சிறப்பு மற்றும் தனித்துவமான குணங்கள் உள்ளன. இந்திய வம்சாவளியினர் வெளிநாட்டில் நடைமுறைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement