விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி அவருடைய ரசிகர்கள் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் 108 தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்தனர்.
வருகிற பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் விநாயகர் சன்னதியில் விஜய் ரசிகர்கள் 108 தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்தனர். அத்துடன், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்த விஜய் ரசிகர்கள் கோயில் வளாகத்தில் அனைவருக்கும் அன்னதாமும் வழங்கினர்.