"மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சிதான்" தமிழ்நாடு-தமிழகம் இருவிதமாகவும் கூறலாம் -குஷ்பு

மும்பையில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டின் தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன் என்றும், தமிழ்நாடு என்றும் தமிழகம் என்றும் அழைக்கலாம் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளலூர் எல்.என்.டி புறவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் பாஜக சார்பில் நம்ம ஊர்பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டு ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்தார். 300 மீட்டர், 200 மீட்டர் என இரு பிரிவுகளில் 4 ரகமாக மாடுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. 40க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் இந்த போட்டியில் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு எல்.இ.டி டிவி மற்றும் டேபிள் ஃபேனுடன் கோப்பைகள் வழங்கப்பட்டன.
image
விழாவின் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குஷ்பு, பாஜக மகளிர் அணி சார்பில் வைக்கப்பட்ட பொங்கலை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் வள்ளி கும்மியாட்ட நடன கலைஞர்களுடன் இணைந்து அவர் நடனம் ஆடினார். இதனை அடுத்து ரேக்ளா பந்தயம் நடைபெறும் சாலையில் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி சென்று பின்னர் கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாடு என்பதை தமிழகம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம் அது தவறில்லை, எப்படி அழைத்தாலும் இந்தியாவின் அங்கம் தான் என்று தெரிவித்தார். பொங்கல் நம்முடைய பாரம்பரிய பண்டிகை, வீட்டில் சந்தோஷம் கொடுக்கும் பண்டிகை இது, ஆனால் அதற்கு அளித்திருக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்க கேடானது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு இவ்வளவு கேவலாமாக நடந்துக் கொள்ளகூடாது.
image
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது, எல்லா பெண்களும் வெளியே போகவில்லை, நானும் கட்சியில் தானே இருக்கிறேன். திமுகவில் தான் எனக்கு எதிராக நடந்துக் கொண்டனர். ஆனால் அதற்கு பாஜக ஆதரவாக நின்றது, அண்ணாமலை களத்தில் போராடினார். கமல்சார் காங்கிரஸ் நடைபயணத்தில் பங்குபெற்றது அவருடைய கட்சியின் உரிமை. பொங்கலுக்கு துணிவு, வாரிசு படங்களுக்கு நான் போகவில்லை, வீட்டில் தான் இருப்பேன். அண்ணாமலை துணிச்சலான தலைவர், முந்தய தலைவர்கள் போன்று இல்லை. தமிழகம், தமிழ்நாடு என சொல்வதில் தவறில்லை என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.