டுவிட்டரில் அதிரடி மாற்றங்களை அறிவித்த எலான் மஸ்க்…!

வாஷிங்டன்,

இந்த நவீன உலகில் அனைத்துமே இணையதளங்களிலேயே நடந்து வருகிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டன. இதனால் பலரும் இணையதளங்களையே நம்பி உள்ளனர்.

இந்தநிலையில், எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில்‛‛ப்ளூ டிக்கிற்கு’ இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் சில டுவிட்டர் பதிவுகள் செய்துள்ளார். அதில், ‛‛ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும்.

இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பங்கள் பாதியாக குறைக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்தநிலையில், எலான் மாஸ் இன்று காலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

டுவிட்டரில் நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும். ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் ரூ.660 கட்டணம். கட்டணம் செலுத்தியவர்களுக்கு நீண்ட நேர வீடியோ மற்றும் ஆடியோக்களை பதிவிடும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

ட்விட்டரின் பயனரின் உரையில் பல மாற்றங்கள் இருக்கும் என பட்டியலிட்டுள்ளார், அது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பின்தொடரும் டுவீட்களுக்கு இடையில் செல்ல வலது/இடதுபுறம் எளிதாக ஸ்வைப் செய்யவும். இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

எனினும், நீண்ட பதிவுகளை வெளியிட அனுமதி வழங்கினால் அதனால் டுவிட்டருக்கு தனித்தன்மை என்பது இல்லாமல் போய் விடும் என பலர் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.