மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை தாமரை வீதியைச் சேர்ந்த ஒரு பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் என்பவரிடம் எனக்கு திருமணம் ஆனது.
5 லட்சத்தில் சீர்வரிசை பொருட்கள், 50 பவுன் நகை கொடுத்து 10 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தனர். எனது கணவர் மதுரை பாலமேடு அரசு கால்நடை மருத்துவமனையில் ஆய்வாளராக வேலை செய்து வருகிறார்.
திருமண நாளில் அவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பதை அறிந்து கொண்டேன். ஆனாலும், அவருடன் வாழ சம்மதித்தேன். ஆனால் என் கணவரின் அண்ணன் அருண்குமார் எனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுக்கிறார். அதற்கு அவருடைய தாயும், மனைவியும் உடந்தையாக இருக்கின்றனர்.
கணவரிடம் கூறிய போது சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என கூறுகிறார். அதற்கு இணங்காததால் என்னை 10 லட்சம் வரதட்சணை கொண்டு வரசொல்லி பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.