பிஜீங்,
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் உச்சம் பெற்று வருகிறது. உயிரிழப்பு, சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இந்திய மருந்துப்பொருட்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளான பிரிமொவிர், பக்சிஸ்டா, மல்னுநெட், மல்நட்ரிஸ் ஆகிய 4 மருந்துகளின் தேவை சீனாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த 4 மருந்துகளும் கொரோனாவுக்கான அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், இந்த மருத்துகளை பயன்படுத்த சீனா அனுமதிக்கவில்லை. ஆனாலும், ஆன்லைன் விற்பனை தளம் மூலம் இந்திய மருந்துப்பொருட்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.